பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


பாலக்கோடு மார்க்கெட்டில்  தக்காளி விலை உயர்வு  விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு தக்காளி மார்ககெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி சாகுபடி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் முதன்மை பயிராக தக்காளி சாகுபடி இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளிகளை விவசாயிகள் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த சந்தையில் தினந்தோறும் 200 முதல் 500 டன் தக்காளி வரத்தை பொறுத்து விற்பனையாகிறது. இந்த சந்தையில் இருந்து உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வியபாரிகள் தக்காளிகளை வாங்கி செல்கின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தக்காளியின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து விற்பனையானது. தற்போது கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருவதால் வயல்களில் மழைநீர் தேங்கியும், தக்காளிகள் அழுகியதால் வரத்து குறைந்து மகசூல் பாதிக்கப்பட்டது.

மேலும் பண்டிகைகள், சுபமுகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி நேற்று மார்க்கெட் நிலவரப்படி 15 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 450 ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனையானது. வரும் வாரங்களில் தக்காளியின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளி விலை உயர்ந்துள்ளதால் அதனை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story