போடியில் தக்காளி விலை உயர்வு
போடியில் தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.
தேனி
போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், விசுவாசபுரம், நாகலாபுரம், மேலசொக்கநாதபுரம், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை போடியில் உள்ள தினசரி மார்க்கெட், வாரச்சந்தை ஆகிய பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் போடி பகுதியில் தொடர் மழை பெய்ததால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ ரூ.10-க்கு விற்ற தக்காளி விலை உயர்ந்து, இன்று ரூ.50-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் தக்காளிகளை வாங்க முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.
Next Story