தக்காளி விலை திடீர் உயர்வு


தக்காளி விலை திடீர் உயர்வு
x

மழையால் வரத்து குறைவால் தஞ்சையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர்


மழையால் வரத்து குறைவால் தஞ்சையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.

காமராஜர் மார்க்கெட்

தஞ்சை-புதுக்கோட்டை சாலை காவேரிநகரில் தற்காலிக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் என 150-க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர். பழனி, தேனி, நீலகிரி, ஓசூர், ஒட்டன்சத்திரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் விலையும் குறைவாக இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

தக்காளி விலை உயர்வு

இந்த மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்தும் குறைந்தது. வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையானது. திடீரென விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, தக்காளி விளைச்சல் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்துள்ளது. இதனால் நாட்டுத்தக்காளி வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. உள்ளூர் பகுதிகளிலும் தக்காளி வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆந்திரா, கர்நாடகா, ஓசூர் பகுதிகளில் இருந்து தான் தக்காளி வந்து கொண்டிருக்கிறது. அதுவும் முன்பு போல் அதிகலோடு வராத காரணத்தினால் தக்காளி விலை அதிகரித்து இருக்கிறது. விலை இன்னும் அதிகரிக்குமா? என ஓரிரு நாட்களில் தெரியவரும் என்றார். மழை தொடர்ந்து பெய்தால் தக்காளி விலை உயர வாய்ப்பு உள்ளது.


Next Story