தக்காளி விலை கடும் சரிவு; கிலோ ரூ.1-க்கு கொள்முதல்


தக்காளி விலை கடும் சரிவு; கிலோ ரூ.1-க்கு கொள்முதல்
x

திருச்சியில் தக்காளி விலை மிகவும் சரிந்துள்ளது. கிலோ ரூ.1-க்கு கொள்முதல் செய்யப்ப டும் தக்காளி சில்லறையில் ரூ.8-க்கு விற்பனை செய்யப்படு கிறது.

திருச்சி

திருச்சியில் தக்காளி விலை மிகவும் சரிந்துள்ளது. கிலோ ரூ.1-க்கு கொள்முதல் செய்யப்ப டும் தக்காளி சில்லறையில் ரூ.8-க்கு விற்பனை செய்யப்படு கிறது.

தக்காளி விலை சரிவு

திருச்சி காந்திமார்க்கெட்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கனிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளி வருகிறது.

இந்த ஆண்டு உற்பத்தி அதிகரித்ததால் தக்காளி வரத்தும் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை தான் விலை போனது. அதே நேரத்தில் ஒரு கிலோ தக்காளி சில்லரை விலையில் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது.

விவசாயிகள் கவலை

இதுபற்றி மணப்பாறையை சேர்ந்த விவசாயி ஒருவரிடம் கேட்ட போது, இந்த ஆண்டு தக்காளி உற்பத்தி அதிகரித்து உள்ளது. இன்னும் ஒருவாரம் இந்த நிலை தான் நீடிக்கும். இதனால் தக்காளியை பறித்து மார்க்கெட்டுக்கு அனுப்பும் பறிப்பு கூலிக்கு கூட பணம் கிடைப்பதில்லை. மண்டிக்கு கொண்டு சென்றால் கிலோ ரூ.1-க்கும், ரூ.2-க்கும் தான் கேட்கிறார்கள். அதனால் பலர் காய்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். கடன் வாங்கி பயிரிடுகிறோம். ஆனால் அசல்கூட கிடைக்காததால் கவலையடைந்துள்ளோம். இதேநிலை நீடித்தால் முற்றிலும் விவசாயம் பாதிக்கும் என்று வேதனையுடன் கூறினார்.

கிலோ ரூ.1-க்கு கொள்முதல்

இதுபற்றி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணனிடம் கேட்டபோது, வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகளிடம் ஒரு கிலோ ரூ.1 முதல் ரூ.2 வரைதான் கொள்முதல் செய்ய முடிகிறது. வண்டி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி எல்லாம் சேர்த்து ரூ.8-க்கு விற்கிறார்கள். ஆனாலும் வாங்குவதற்கு ஆள் இல்லாததால் அவை தேக்கம் அடைந்துள்ளன. தற்போது ஆங்காங்கே மழை பெய்வதால் தக்காளி வரத்து விரைவில் குறைந்து விலை உயரும், என்றார்.


Next Story