மளிகை கடையில் தக்காளி திருடிய வாலிபர்-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


மளிகை கடையில் தக்காளி திருடிய வாலிபர்-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x

மளிகை கடையில் வாலிபர் தக்காளி திருடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சேலம்

இளம்பிள்ள:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்றது. இதையொட்டி இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை கடைகளில் தக்காளி திருட்டு போன சம்பவம் நடந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வெளியே வைத்திருந்த தக்காளி கிரேடு திருட்டு போனது. இதையறிந்த கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தார். அதில் வாலிபர் ஒருவர் கடை முன்பு சிறிது நேரம் அங்கும் இங்குமாக பார்த்து கொண்டு நின்றவர் பின்னர் நைசாக கடையில் இருந்த தக்காளியுடன் கிரேடை திருடி ஸ்கூட்டரில் வைத்து அங்கிருந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story