தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
அன்னவாசல் பகுதியில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனையானது.
கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த இரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.150-க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியை கூடுதலாகக் கொள்முதல் செய்து பண்ணை பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனைய் தொடங்கி ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்து வந்தது. அதே சமயம் பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்துள்ளது. இந்தநிலையில் அன்னவாசல் பகுதிகளில் நேற்று வரை தக்காளி கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முக்கண்ணாமலைப்பட்டி வாரச்சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளது. நேற்று விலையை விட கிலோவுக்கு ரூ.50 குறைந்து கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.