நடமாடும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்யலாம்


நடமாடும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்யலாம்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடமாடும் கடைகள் மூலம் தெருக்களில் தக்காளியை விற்பனை செய்யலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழகத்தில் நடமாடும் கடைகள் மூலம் தெருக்களில் தக்காளியை விற்பனை செய்யலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நிர்வாக திறமையில்லை

நாகர்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலினுக்கு நிர்வாக திறமை இல்லை. தக்காளி விலை உயர்ந்துள்ளதால் கூடுதலாக ரேஷன் கடைகளில் தக்காளியை விற்கலாம். நடமாடும் கடைகள் மூலமும் தெருக்களில் விற்பனை செய்யலாம். அப்போது தான் மக்களுக்கு எளிதாக கிடைக்கும். ஆனால் இது முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை. எப்போது சோதனை வரும் என்ற பயத்திலேயே அவர் இருக்கிறார்.

ஊழல் நிறைந்தது

தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்தது. மதுபாட்டிலில் அரசு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக கமிஷன் வாங்கலாம் என்று கண்டுபிடித்தது தி.மு.க. ஆட்சியில் தான். 3 ஆயிரம் பார்களை அனுமதியில்லாமல் நடத்தியுள்ளனர்.

இதைத்தான் அன்றே சர்க்காரியா கமிஷன் கூறினார்கள். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது செந்தில்பாலாஜியை ஊழல்வாதி என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் மகன் மீது புகார்

அமலாக்கத்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜியை அனைத்து அமைச்சர்களும் போய் பார்த்தார்கள். அதே சமயம் அமைச்சர் பொன்முடியை சென்று பார்க்கவில்லை. ஏனெனில் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் மாட்டிக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள். கோடநாடு கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கேட்கிறீர்கள். ஆனால் அவரது மகன் மீது ஒரு பெண் போக்சோ புகார் அளித்துள்ளார். அதுதொடர்பாக இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பார்க்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்துள்ளார்கள். கட்சியில் துரோகம் செய்து விட்டு போனவர்கள் ஏதாவது பேசத் தான் செய்வார்கள். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய கட்சியை வளர்க்க கொள்கை ரீதியாக பாத யாத்திரை செல்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story