பறவையின் அலகு வடிவத்தில் தக்காளி
பறவையின் அலகு வடிவத்தில் தக்காளி
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி மார்க்கெட்டிற்கு உள்ளூர் மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்காளி பெட்டியில் இருந்த தக்காளி ஒன்று வித்தியாசமான வடிவத்தில் இருந்தது. இது காண்பதற்கு பென்குயின் போன்ற வடிவிலும், பறவையின் அலகு போன்ற தோற்றத்துடனும் காணப்பட்டது. வித்தியாசமான வடிவிலான தக்காளியை கடைக்காரர் பொதுமக்கள் பார்வைக்காக தனது கடையில் வைத்திருந்தார். இதனை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு சென்றனர்.
Related Tags :
Next Story