டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை
வள்ளலார் நினைவு நாளையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேதி மூடி வைக்க வேண்டும்.
எனவே நாளை மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்த போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.