கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் ஆகியவை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா களை கட்ட தொடங்கும். அதன்படி, நேற்று அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்பட்டார். நாளை கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்.
இந்த நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Related Tags :
Next Story