திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை
x

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிற நிலையில் தேர்வு கட்டாயம் நடைபெறும். தேர்வில் எந்தவித மாற்றமும் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைகிறது. கோவில் தேரோட்டம் நாளை மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story