நாளை மின்நிறுத்தம்
வீரமரசன்பேட்டை, திருமலைசமுத்திரத்தில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
தஞ்சாவூா்,
வீரமரசன் பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பூதலூர், செல்லப்பன் பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீரகண்டியன்பட்டி, வெண்டையம் பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், இந்தளுர், சோளகம் பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமி புரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்ச சமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி, ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வல்லம், வல்லம்புதூர், மொனையம் பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சாணுரப்பட்டி, ஆச்சம் பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அளிச்சக்குடி, அம்மையகரம், தென்னகுடி, பிள்ளையார் நத்தம், சர்க்கரை நத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளம் பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்