பெட்டவாய்த்தலை, முக்கொம்பு, அளுந்தூர், மணிகண்டம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
பெட்டவாய்த்தலை, முக்கொம்பு, அளுந்தூர், மணிகண்டம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி கிழக்கு கோட்டத்துக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை, சிறுகமணி துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். அதன்படி, பெட்டவாய்த்தலை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையர்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ்.புதுக்கோட்டை, சிறுகமணி, பெருகமணி, சோழவந்தான்தோப்பு, திருமுருகன்நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிழுந்தான்பாறை, எஸ்.கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி ஆகிய இடங்களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இதேபோல் சிறுகமணி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பழங்காவேரி, வள்ளுவர் நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரன் பாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின்ரோடு, அணலை, திருப்பராய்த்துறை, எலமனூர், கொடியாலம், அம்மன்குடி, முக்ெகாம்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
மேலும் அளுந்தூர் துணை மின் நிலையத்தில் பாத்திமாநகர், அளுந்தூர், யாகப்புடையான்பட்டி, எரங்குடி, கும்பகுறிச்சி, வேலப்புடையான்பட்டி, சூரக்குடிபட்டி, செவந்தியானிப்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, குன்னத்தூர், பிடாரம்பட்டி, துரைக்குடி, சரளப்பட்டி, கலிமங்கலம், சேதுராப்பட்டி பகுதிகளிலும், மணிகண்டம் துணை மின் நிலையத்தில் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர்நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.