பெட்டவாய்த்தலை, சிறுகமணி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பெட்டவாய்த்தலை, சிறுகமணி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருச்சி பெட்டவாய்த்தலை துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பளையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையர் தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலி ஆண்டபுரம், எஸ்.புதுக்கோட்டை, சிறுகமணி, பெருகமணி, சோழவந்தான் தோப்பு, திருமுருகன் நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிளுந்தான்பாறை, எஸ்.கவுண்டம்பட்டி, குறுச்சி, பாறைபட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாளம், பணிக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
இதேபோல் சிறுகமணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி வள்ளுவர் நகர், காமநாயகன்பாளையம், காவல்காரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.