விருதுநகர் குல்லூர்சந்தை, சேதுநாராயணபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
விருதுநகர் குல்லூர்சந்தை, சேதுநாராயணபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(சனிக்கிழமை) சேது நாராயணபுரம், மங்களம், சுக்கலாம்பட்டி, பாட்டக்குளம் வலையப்பட்டி, மேட்டு முள்ளிக்குளம், விழுப்பனூர், குப்பச்சிபட்டி, ரெங்கபாளையம், கனம்பட்டி, நாச்சியார்புரம் பெரியகுளம் பகுதி, குப்பா மடம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என மின்கோட்ட பொறியாளர் சின்னத்துரை அறிவித்துள்ளார்.
விருதுநகர் மின் கோட்டத்தில் நாளை மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை விருதுநகர் புறநகர் பகுதிகளான பாப்பாக்குடி, வடமலைகுறிச்சி, மீனாட்சிபுரம், சின்னபேராலி, பெரிய பேராலி, இ.குமாரலிங்காபுரம், நடுவப்பட்டி, சந்தையூர், ராமலிங்கபுரம், ஆர்எஸ். நகர், பொட்டல்பட்டி, பசும்பொன் நகர், விருதுநகர் குல்லூர் சந்தை ரோடு, பவுண்டு தெரு, சவுண்டி தெரு, அருப்புக்கோட்டை ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மேலும் மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை விருதுநகர் திருவள்ளுவர் தெரு, கத்தாளம்பட்டி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.