தக்காளி விலை கிலோ ரூ.15-க்கு விற்பனை
காங்கயம் வாரச் சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கயம் வாரச் சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாரச்சந்தை
காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள், வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இதன் காரணமாகவே வாரந்தோறும் சந்தை நடைபெறும் நாளில் விவசாய தொழிலார்கள், தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலார்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம பகுதி மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் சந்தைக்கு வந்து செல்வார்கள்.
தக்காளி
அதன்படி நேற்று கூடிய வார சந்தையில் முதல் தரமான தக்காளி ஒரு கிலோ ரூ.15-க்கும், இரண்டாம் தரமான தக்காளி ரூ.10-க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.25-க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.20 முதல் 30- க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன், அதிக அளவில் தக்காளிகளை வாங்கிச் சென்றனர். தக்காளியின் விளைச்சல் அதிகமாகி தற்போது உற்பத்தி அதிகரித்ததன் காரணத்தினால் தக்காளியின் விலை குறைந்துள்ளதாகவும், வரும் நாட்களில் இன்னமும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.