தக்காளி விற்கும் விவசாயிகளுக்கு செட் அமைக்க வேண்டும்


தக்காளி விற்கும் விவசாயிகளுக்கு செட் அமைக்க வேண்டும்
x
திருப்பூர்


உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து நேற்று திருப்பூர் மேயர் தினேஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில், 'தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டில் விவசாயிகள் தக்காளி விற்கும் இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த செட் போதவில்லை. மீதம் உள்ள இடம் காலியாக உள்ளது. அந்த காலி இடத்திலும் செட் அமைத்தும், தளம் அமைத்தும் கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த செட்டில் மின்வசதி செய்து தர வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கனவே நிறைவேற்றிக்கொடுத்ததற்கு நன்றி' என்று கூறியுள்ளார்.


Next Story