468 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது


சேவூர் அருகே 468 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்

சேவூர் அருகே 468 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேவூர் அருகே வேட்டுவபாளையம் சாலை சூர்யா கார்டன் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டதில் அங்கு விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் சேவூர் கைகாட்டியில் பெட்டிக்கடை நடத்தி வரும் தேவகோட்டையை சேர்ந்த குமார் என்ற விஜயகுமார் (32), கோபிசெட்டிபாளையம் அவையார்பாளையம் அயலூரைச்சேர்ந்த செல்வம் என்ற சுந்தரமூர்த்தி (42) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 468 கிலோ புகையிலைப்பொருட்கள், ரூ.25 ஆயிரம் பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story