குமரியில் 23 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜோதி ஓட்டம்


குமரியில் 23 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜோதி ஓட்டம்
x

உலக போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு குமரியில் 23 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜோதி ஓட்டம் நடந்தது. கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ஜோதி ஓட்டத்தை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

உலக போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு குமரியில் 23 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜோதி ஓட்டம் நடந்தது. கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ஜோதி ஓட்டத்தை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

ஜோதி ஓட்டம்

ஜூன் மாதம் 26-ந் தேதி உலக போதை விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் குமரியில் 23 இடங்களில் இருந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் புறப்பட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். அதை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை கலெக்டர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ஜோதி ஓட்டம் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு கொட்டாரம் வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை அடைந்தது.

மீட்டெடுக்க முன்வர வேண்டும்

அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், ஜோதி ஓட்டத்தில் கலந்து கொண்ட வீரரிடம் இருந்து ஜோதிைய பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் விழிப்புணர்வு ஜோதியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 23 இடங்களில் ஜோதி விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது. போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பழக்கங்களுக்கு அடிமையான தங்களுடைய நண்பர்கள், சுற்றத்தார் உள்ளிட்ட அனைவரையும் அந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சான்றிதழ் வழங்கினார்

நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, ஜோதி ஓட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிறில் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story