திருச்சி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டில் பக்கங்கள் கிழிப்பு; ஒருவர் கைது
திருச்சி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டில் பக்கங்கள் கிழித்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சம்பவத்தன்று இரவு 10.50 மணி அளவில் ஏர் ஏசியா விமானம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புறப்பட தயாரானது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாலா (வயது 55) என்பவரின் பாஸ்போர்ட் சோதனை செய்த போது அவரது பாஸ்போர்ட்டின் 17 மற்றும் 18-ம் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story