உடன்குடி பகுதியில் சூறைக்காற்று
உடன்குடி பகுதியில் சூறைக்காற்று காரணமாக சாலையில் மரம் சரிந்து விழுந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், செட்டியாபத்து, தண்டுபத்து, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, சிறுநாடார்குடியிருப்பு, மெய்யூர் தங்கையூர், பிறை குடியிருப்பு ஆகிய பகுதிகளில் திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் உடைமரம் நடுரோட்டில் சாய்ந்து விழுந்தது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. பல இடங்களில் முருங்கை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் முருங்கை விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தனர்.
Related Tags :
Next Story