போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் -இந்து முன்னணி வலியுறுத்தல்


போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் -இந்து முன்னணி வலியுறுத்தல்
x

தமிழகத்தில் சமீபகாலமாக போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாகியுள்ளது.

சென்னை,

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் சமீபகாலமாக போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாகியுள்ளது. மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கவழக்கங்களே இருந்து வந்தநிலையில் இப்போது கஞ்சா போதை மாத்திரை, போதை ஊசி போன்ற பொருட்கள் பரவி பலரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது. இந்த போதை பழக்கங்களால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கெல்லாம் மூலமாக செயல்படுவது டாஸ்மாக்கின் மது விற்பனை தான். தமிழகத்தில் நுழைந்து வரும் பல்வேறு விதமான போதைப்பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

லஞ்சம் பெற்றுக்கொண்டு போதைப்பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும். கடுமையான சட்ட திட்டங்கள் மூலமாக போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழித்து போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story