சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும்


சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்

நாகப்பட்டினம்

நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள், சாகச சுற்றுலா, உண்டு, உறைவிடம் முகாம் நடத்துபவர், முகாம் நடத்துபவர்கள், கேரவன் சுற்றுலா நடத்துபவர்கள், தொழில் முனைவோர்கள் கண்டறிந்து அவர்களை www.tourismpoompuhar@gmail.com என்ற சுற்றுலா இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் சுற்றுலாத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பதிவு செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணை, அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story