முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி


முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி
x
தினத்தந்தி 19 Jan 2023 12:45 AM IST (Updated: 19 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பண்டிகை காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

திருவாரூர்

பண்டிகை காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

அலையாத்திக்காடு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை கடலோர பகுதியாகும். இங்கு அமைந்துள்ள அலையாத்திக்காடு ஆசியாவின் மிகப்பெரிய அலையாத்திக்காடுகளுள் ஒன்று. இந்த காட்டின் அழகை ரசிக்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் முத்துப்பேட்டைக்கு சுற்றுலா வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு வந்த சிலர் மதுபோதையில் பிரச்சினையில் ஈடுபட்டனர்.

தடை விதிப்பு

இதன் எதிரொலியாக பொங்கல் பண்டிகை மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் நேற்று முன்தினம் (17-ந் தேதி) வரை 3 நாட்கள் அலையாத்திக்காட்டுக்கு செல்வதற்கு மாவட்ட வனத்துறை தடை விதித்தது. பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் தடை விதிக்கப்பட்டதன் காரணமாக முத்துப்பேட்டை அலையாத்திக்காடு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மீண்டும் அனுமதி

இந்த நிலையில் தடை நீக்கக்கப்பட்டு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல மீண்டும் அனுமதி அளித்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி உத்தரவிட்டார்.

இதன் காரணமாக நேற்று முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.


Next Story