பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி
தக்கலை:
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை தினமான நேற்று அரண்மனையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்தனர். அவர்கள் பழமைவாய்ந்த அரண்மனையின் ஒவ்வொரு அறைகளிலும் காணப்படும் மரத்தினாலான கலை சிற்பங்களையும், மன்னர்கள் பயன்படுத்திய போர்கருவிகள், 90 வகை மூலிகைகளால் செய்யப்பட்ட மர கட்டில் போன்றவற்றையும் பார்த்து ரசித்து சென்றனர்.
இதுபோல், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
Related Tags :
Next Story