சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து


சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 14 May 2023 1:15 AM IST (Updated: 14 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

நீலகிரி

கூடலூர்

கேரள-கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 15 பேர் பயணம் செய்தனர். கூடலூர் 27-வது மைல் பகுதியில் வந்த போது சுற்றுலா வேன் திடீரென நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வேனுக்குள் இருந்த 15 சுற்றுலா பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதை அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து சுற்றுலா வேனை அப்புறப்படுத்தினர். இதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. முன்னதாக கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சுற்றுலா பயணிகள் தங்களது ஊருக்கு வேறு வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story