குமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - ஐயப்ப பக்தர்கள்
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், கன்னியாகுமரி களைகட்டியுள்ளது.
கன்னியாகுமரி,
உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்கும் கன்னியாகுமரியில் அதிகாலை மற்றும் மாலையில் கடலில் சூரியன் உதயம் மற்றும் மறையும் இயற்கை நிகழ்வை கண்டு ரசிப்பதற்காகவும் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சவாரி மூலமாக சென்று காண்பதகாகவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரி சுற்றுலா தலத்திற்கு வருகை தருவார்கள்.
அந்த வகையில் இன்று வார விடுமுறையை முன்னிட்டு, சூரியன் உதயமாகும் காட்சியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குமரி கடற்கரையில் குவிந்தனர்.
அவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு செல்லி எடுத்தும் கடற்கரையில் முக்கூடல் சங்கமத்தில் புனித நீராடியும் உற்சாகம் அடைந்தனர். மேலும், விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல படகு தளத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், கன்னியாகுமரி களைகட்டியுள்ளது.