குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் நேற்று முன்தினம் மதியம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர். தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது.
Related Tags :
Next Story