திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மழையின் அளவு குறைந்ததால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சுற்றுலாத்தலங்களை நாடி வருகின்றனர்.
அந்த வகையில் வாரத்தின் கடைசி நாளான இன்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கி உள்ளனர். உள்ளூர் உட்பட அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
அருவியில் கொட்டும் மிதமான நீரில் உற்சாகமாக நீராடியும், அருகில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தும், சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story