பூத்துக்குலுங்கும் பூக்களை பார்த்து ரசிக்கும் சுற்றுலா பயணிகள்


பூத்துக்குலுங்கும் பூக்களை பார்த்து ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
x

கொடைக்கானலில், பூத்துக்குலுங்கும் பூக்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

திண்டுக்கல்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள மரங்களில் இலைகளே தெரியாத அளவுக்கு இளஊதா நிறத்தில் ஜெகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. வழக்கமாக இந்த மரங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூக்கள் பூக்கும். ஆனால் இந்த ஆண்டு, மார்ச் மாத தொடக்கத்திலேயே பூக்க தொடங்கி உள்ளது. இதனை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பார்த்து ரசித்து செல்கின்றனர்.


Next Story