கன்னியாகுமரியில் கடற்கரையில் திரண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம்


கன்னியாகுமரியில் கடற்கரையில் திரண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோடைவிடுமுறையில் கன்னியாகுமரி கடற்கரையில் திரண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்,

கோடைவிடுமுறையில் கன்னியாகுமரி கடற்கரையில் திரண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். அங்கு முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண குவிந்தனர்.

அந்த காட்சியை கண்டு ரசித்ததும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பிறகு கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட படகில் பயணம் செய்து ரசித்தனர். இதற்காக நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

கடற்கரையில் திரண்டு உற்சாகம்

மாலை நேரத்தில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசியது. இதனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அனுபவித்தனர். காலையில் இருந்ததை விட மாலையில் கடற்கரையில் கூட்டம் அலைமோதியதால் கன்னியாகுமரி களை கட்டியது. மேலும் கூட்டத்திற்கு இடையே ஏதேனும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.


Next Story