வார விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


வார விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் பூக்கத் தொடங்கியுள்ளன.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சுற்றுலா சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சுற்றுலா சீசனும் நடக்கிறது. இந்த சீசன் காலங்களில் நீலகிரிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் இருந்து சுற்றுலா பயணிகல் வருகை தருகின்றனர்.

இதற்கிடையே தென்மேற்கு பருவமழை ஆகஸ்டு மாதத்தில் அதிக அளவில் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மழை இல்லை. மேலும் இதமான காலநிலை நிலவுதால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில் இன்று வார விடுமுறை தினம் என்பதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக அரசு தாவரவியல் பூங்காவை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஊட்டியில் 2-ம் பருவ மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் பூக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story