திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
விடுமுறை தினத்தை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
திருவட்டார்:
விடுமுறை தினத்தை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
திற்பரப்பு அருவி
குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோதையாற்றில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் பாய்கிறது. விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வாகனங்களில் வந்தனர்.
அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, அருவியின் அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்தில் குளித்து, பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.
படகு சவாரி
திற்பரப்பு படகு துறையில் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் இங்குள்ள கடைகளில் நல்ல வியாபாரம் நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்ததையொட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காகவும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
மாத்தூர் தொட்டிப்பாலம்
இதுபோல் மாத்தூர் தொட்டிப் பாலத்திலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதி வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர்.