சிறுமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


சிறுமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

சிறுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் செயற்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

திண்டுக்கல்

'குட்டி கொடைக்கானல்' என்று அழைக்கப்படும் சிறுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறுமலையில் பல்லுயிர் பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சிறுமலை பழையூரில் ரூ.33 லட்சத்தில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டது.

இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா தலமாக மாறி வரும் சிறுமலைக்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் சிறுமலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக செயற்கை நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி இன்று சிறுமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் செயற்கை நீர் வீழ்ச்சியில் குடும்பத்தினருடன் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.


Next Story