கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

ஈரோடு

கடத்தூர்

கோபியை அடுத்த கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து தண்ணீர் ெகாட்டும் எனவே இங்கு குளிப்பதற்காக ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், திருப்பூர், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், கோடை விடுமுறை என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரிக்கு அணையில் குவிந்தனர். பின்னர் அவர்கள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்ததுடன், அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன் வறுவல்களை வாங்கி சாப்பிட்டனர். அதுமட்டுமின்றி பலர் தாங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள் அங்குள்ள அணை பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடினர்.


Next Story