கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்; ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்


கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்; ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
x

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

ஈரோடு

கடத்தூர், ஜன.30-

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள்

கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும். எனவே கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.

பின்னர் அவர்கள் அங்கு அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வதுடன், அணை பகுதியில் விற்கப்படும் மீன் வறுவல்களையும் வாங்கி உண்பர். குறிப்பாக சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் கொடிவேரி அணைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

குவிந்தனர்

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அணை பகுதியில் விற்கப்பட்ட மீன் வறுவல்களை வாங்கி உண்டதுடன், தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்தும் உண்டனர். மேலும் அணை பகுதியில் பரிசலில் பயணம் செய்தும் சுற்றுலா பயணிகள் பொழுதை போக்கினர்.

இதையொட்டி கொடிவேரி அணை பகுதியில் கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story