கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்;ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
கடத்தூா்
கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
கொடிவேரி அணை
கோபியை அடுத்த கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இங்குள்ள தடுப்பணையில் தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும். எனவே இங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவார்கள். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீாில் குளிப்பதுடன், அங்குள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன் வறுவல்களையும் வாங்கி சாப்பிடுவர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து உண்பர். அதுமட்டுமின்றி அணையையொட்டி உள்ள பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடியும் மகிழ்வார்கள்.
குவிந்த சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை என்பதாலும், கோடைக்காலம் என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதையொட்டி அணை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.