அமிர்தி பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்


அமிர்தி பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஆங்கில புத்தாண்டையொட்டி அமிர்தி பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இந்த பூங்காவில் பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய், சிறுவர்களுக்கு 5 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு 25 ரூபாய், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று அமிர்தி உயிரின பூங்கா விடுமுறை அளிக்காமல், வழக்கம்போல் செயல்பட்டது. சுற்றுலா பயணிகளும் குடும்பத்தினருடன் அதிகளவில் குவிந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். அதன்படி நேற்று ஒரு நாள் மட்டும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 5,400 பேர், வாகனங்கள் நிறுத்த கட்டணத்துடன் சேர்த்து ரூ.93 ஆயிரத்து 500 வசூலாகியுள்ளது. அமிர்தி வனச்சரக அலுவலர் முருகன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story