குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து நீண்ட வரிசையில் நின்று அருவிகளில் குளித்தனர்.

தென்காசி

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து நீண்ட வரிசையில் நின்று அருவிகளில் குளித்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தான் சீசன் தொடங்கியது. தற்போது சீசன் மிகவும் அருமையாக உள்ளது. சாரல் மழை விட்டுவிட்டு பெய்கிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து குவிந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் அதிகமான ஆண்கள் வந்ததால் அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி போலீசார் குளிக்க செய்தனர்.

குளிக்க தடை

நேற்று முன்தினம் இரவில் சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் நேற்று காலையில் நீர்வரத்து அதிகரித்தது.

மெயின் அருவியில் நேற்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். சிறிது நேரத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. எனவே, சுமார் 10 நிமிடத்திற்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் போலீசார் அனுமதித்தனர். இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக குளித்துச்சென்றனர்.


Next Story