குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் குடும்பத்துடன் உற்சாக குளியல்


குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் குடும்பத்துடன் உற்சாக குளியல்
x

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அருவிகளில் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அருவிகளில் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் சீசன்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. சாரல் மழை விட்டு விட்டு பெய்கிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது.

சாரல் மழை காரணமாக இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக விழுகிறது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நேற்று குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் பெரும்பாலான விடுதிகள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டது. இங்குள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் கூட்டம் அலைமோதியதால் சுற்றுலா பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து குளித்தனர்.

ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை அவ்வப்போது போலீசார் சரிசெய்தனர்.

2 நாள் விடுமுறை

இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதாலும், நாளை (திங்கட்கிழமை) நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாலும் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஐந்தருவி படகு குழாமில் இன்று காலை முதல் படகு சவாரியும் தொடங்கப்படுகிறது.


Next Story