வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் தவித்த சுற்றுலா பயணிகள்


வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் தவித்த சுற்றுலா பயணிகள்
x

வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுற்றுலா பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

திருச்சி

ஜீயபுரம்:

அணிவகுத்து நின்ற வாகனங்கள்

திருச்சி மாவட்டத்தில் இயற்கை எழில்மிக்க முக்கொம்பு சுற்றுலா மையம் உள்ளது. இப்பகுதியில் காவிரி ஆறு, கொள்ளிடம் ஆறு என இரண்டாக பிரிந்து செல்கிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக ஆடி 18, தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மற்றும் முக்கிய விழா காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் இந்த சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இந்நிலையில் மதிய நேரத்தில் காவிரி பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் காவிரி பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் தவித்தனர்.

கோரிக்கை

நீண்ட நேரத்திற்கு பிறகு அங்கு பணியில் இருந்த போலீசார் காவிரி பாலத்தில் போக்குவரத்தை சரி செய்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி பாலத்தின் வழியாக நடந்து சென்றனர். தற்போது காவிரி பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இது போன்று வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கடும் வெயிலில் நின்று சென்றனர்.

எனவே இது போன்று வாகனங்கள் பாலத்தில் நிற்காதவாறு செல்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.


Next Story