வத்தலக்குண்டுவில் எரிவாயு தகனமேடையுடன் மயானம்; பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
வத்தலக்குண்டுவில் எரிவாயு தகனமேடையுடன் மயானம் அமைக்கப்படும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல்
வத்தலக்குண்டு பேருராட்சி கூட்டம், அதன் தலைவர் சிதம்பரம் தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் தர்மலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான நகலை வாசித்தார்.
பின்னர் கூட்டத்தில், வத்தலக்குண்டு பேரூராட்சியில் நவீன எரிவாயு தகனமேடையுடன் மயானம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் பேரூராட்சி குப்பைக்கிடங்கில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியை உரிய காலக்கெடுவிற்குள் முடிக்க தவறியது மற்றும் பல்வேறு வாய்ப்புகள் வழங்கியும் பணியை தொடங்காத சென்னை தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சரவணபாண்டியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story