நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்


நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் கோட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது

தென்காசி

சங்கரன்கோவில் மின் கோட்டத்துக்கு உட்பட்ட மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி, துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் மலையாங்குளம், சிதம்பரபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிக்குளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரங்கசமுத்திரம், ஆலமநாயக்கன்பட்டி, மகாதேவர்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சான்குளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம், குண்டபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், நக்கலமுத்தன்பட்டி, கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்வினியாக செயற்பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன் (சங்கரன்கோவில்), பிரேமலதா (கடையநல்லூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story