இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் கண்டெடுப்பு


இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் கண்டெடுப்பு
x

இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் பனை ஓலை போன்ற இரும்பு தகடாகும். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதனை புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவையின் நிறுவுனர் தமிழரசன், செயலாளரும், தொல்லியல் ஆர்வலருமான மாரிமுத்து மற்றும் பி.எஸ்.என்.எல். ஓய்வுப் பெற்ற ஊழியர் கணேசன் ஆகியோர் இணைந்து பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் அமைந்துள்ள குறுக்கு வாரி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ''இப்பகுதியில் ஏராளமான இரும்பு தாதுக்கள் கிடைக்கின்ற படியால் அவற்றை உருக்கி இரும்பாலான ஆயுதங்களை தயாரித்துள்ளது தெரியவருகிறது. இப்படி தயாரிப்பதற்கு துளையிட்ட சுடுமண் குழாய்கள் மாவட்டத்தில் ஏராளமாக கிடைத்திருக்கிறது. இரும்பின் பயன்பாட்டை அறிந்து போர் கருவிகளை செய்வதற்கு இப்பகுதியில் இரும்பு உருக்காலைகளை நிறுவியிருக்கலாம்.

இப்பகுதி பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு காலமாகவும் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். இங்கு வட்ட வடிவமாக தாழி போன்ற அமைப்புடன் உலைக்கலன்கள் புதைந்த நிலையில் கட்டுமானத்துடன் உள்ளது. பனைமரங்கள் நிறைந்த இவ்விடங்களில் எஞ்சிய இரும்பு கழிவுகளை கொட்டும்போது பனைக்குருத்தின் மையப்பகுதியிலிருந்து ஓலை விரிந்த நிலையில் இரும்பு தாதுக்கள் அதன் மீது கொட்டப்பட்டு குருத்தோலை விரிந்த நிலையில் அச்சு வார்ப்பாக செம்புராங் கற்களின் மீது படிந்துள்ளது.தமிழக அரசும், தொல்லியல்துறையும் இப்பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்தால் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும்'' என்றனர்.


Next Story