மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் சாவு
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் சாவு
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் திருவரசமூர்த்தி மகன் மணிமாறன் (வயது 32). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிமாறன் ெசாந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மணிமாறன் மோட்டார் சைக்கிளில் ஆனதாண்டவபுரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளார். கழுகாணிமுட்டம் மெயின்ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story