அரசு பஸ் மோதி டிராக்டர் டிரைவர் படுகாயம்


அரசு பஸ் மோதி டிராக்டர் டிரைவர் படுகாயம்
x

அரசு பஸ் மோதி டிராக்டர் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

கரூர்

கடவூர் ஒன்றியம், சங்கி பூசாரி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). டிராக்டர் டிரைவர். இவர் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக பஞ்சப்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் சங்கி பூசாரி கிராமத்திற்கு டிராக்டரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். சுக்காம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே புலியூர் அன்பு நகரை சேர்ந்த வரதராஜன் (56) என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ், எதிர்பாராத விதமாக டிராக்டரின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கனகராஜ் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story