டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி


டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
x

வாணியம்பாடியில் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் உள்ள 40 தெருக்களுக்கு நகராட்சி சார்பில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1-வது வார்டு பெரியபேட்டை வி.எஸ்.வி. தெருவில் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதில் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த முகிலன் உள்பட 7 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பேவர் பிளாக் கற்கள் லோடு ஏற்றி வந்த டிராக்டர் சாலை அமைக்கும் தெருவில் திரும்பிய போது எதிர்பாராவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலையில் கற்களை அடுக்கி வைத்திருந்த முகிலன் மீது டிராக்டர் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த முகிலனை மீட்ட சக பணியாளர்கள் அவரை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகிலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story