செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்


செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Feb 2023 10:58 PM IST (Updated: 6 Feb 2023 5:02 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி பகுதிகளில் வருவாய் ஆய்வாளர் கீதா, ராஜக்கல் கிராம நிர்வாக அலுவலர் யோகானந்தம் மற்றும் கிராம உதவியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தினர். உடனே டிரைவர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் சோதனை செய்ததில் செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story