டிராக்டர்-லாரி மோதல்; டிரைவர் படுகாயம்


டிராக்டர்-லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
x

டிராக்டர்-லாரி மோதலில் டிரைவர் படுகாயமடைந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ்(வயது 36). இவர் திட்டக்குடி மருவத்தூரை சேர்ந்த ஆனந்துக்கு சொந்தமான டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று டிப்பருடன் கூடிய டிராக்டரில் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சென்று சாத்தமங்கலம் சர்க்கரை ஆலையில் இறக்கிவிட்டு, மீண்டும் சொந்த ஊர் நோக்கி கீழப்பழுவூரில் இருந்து கைகாட்டி செல்லும் சாலையில் பொய்யூர் பருத்தி ஆலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கீழப்பழுவூர் நோக்கி சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரியும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த பாக்கியராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story