மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்


மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Jun 2022 12:00 AM IST (Updated: 9 Jun 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது

திருவாரூர்

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை அடுத்த இனாம்கிளியூர் அருகே குடமுருட்டி ஆற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தப்படுவதாக வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தாசில்தார், மண்டல துணை தாசில்தார் ஆனந்தன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை நிறுத்த முயன்றபோது, டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடி விட்டார். அதனைத்தொடர்ந்து மணலுடன் அந்த டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story